வெற்றி பெற ரம்மி டிப்ஸ் & தந்திரங்கள்
13 கார்டுகள் ரம்மியை வெற்றி கொள்வதற்கான குறிப்புகள்
ஒருவேளை நீங்கள் உங்களது 13 கார்டு ரம்மி விளையாட்டை சிறப்பாக்குவதற்கான வழிகளை எதிர்நோக்கும் பட்சத்தில், நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உண்மை என்னவெனில் எந்த அளவிற்கு நீங்கள் அதிகமாக விளையாடுகிறீர்களா அந்த அளவிற்கு நீங்கள் விளையாட்டில் மேம்பட முடியும். ஆனால் எங்களது குறிப்புகள், அனைத்து மற்ற ஆட்டக்காரர்களை காட்டிலும் நீங்கள் ஒரு படி முன்னே இருப்பதற்கு உங்களுக்கு உதவிடும். அதிகமாக வெற்றி கொள்ள அதிகமாக விளையாடுங்கள்!
ஒவ்வொரு முறையும் ரம்மி விளையாட்டில் வெற்றி கொள்வதற்கான உத்திகள்:
- உங்களது முன்னுரிமைகளை சரியாக பெற்றிடுங்கள், இதன் பொருள் தூய்மையான செட்டை கொண்டிருப்பது முக்கியம் என்பதாகும். இதனை நீங்கள் கொண்டிருக்கும் பட்சத்தில், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கலாம்.
- விழிப்புடன் இருங்கள் மேலும் மற்ற ஆட்டக்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும் கவனமாக இருங்கள். மற்ற ஆட்டக்காரர்கள் எதனை விடுவிக்கிறார்கள் மற்றும் திறந்தநிலை கார்டுகள் தொகுதியிலிருந்து எதனை எடுக்கிறார்கள் என்பதை கவனிப்பது விளையாட்டு குறித்த சிறந்த யோசனையை உங்களுக்கு கொடுத்திடும். இந்த வழியில் எந்த சரியான கார்டை தக்க வைத்துக் கொள்வது அல்லது விடுவிப்பது என்பதை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ள முடியும்.
- எப்போதும் அதிக புள்ளிகளை கொண்ட கார்டுகளை வெளியேற்ற முயலுங்கள். இது, ஒருவேளை உங்கள் எதிராளி உங்களுக்கு முன்னரே ஷோவை காண்பிக்கும் பட்சத்தில், உங்களது தேவையற்ற புள்ளிகள் குறைக்கப்படுவதை உறுதி செய்திடும்.
- ஒரு செட்டில் 3 கார்டுகளுக்கும் மேலாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த உண்மையைப் பெரும்பாலான ஆட்டக்காரர்கள் அறிந்து கொள்வதில்லை.
- எப்போதும் சாதுரியமான கார்டுக்காக எதிர்நோக்கி, அதனை சேகரியுங்கள். இந்த கார்டுகள் தான் நீங்கள் ஒரு தொகுதியை உருவாக்குவதற்கு எளிதாக உதவிடும். உதாரணமாக, எந்த சூட்டையும் சார்ந்த 7 என்ற எண் அதே சூட்டை சார்ந்த 5 & 6 டன் ஒன்றிணைந்து செயல்படும், அதேபோல் அதே சூட்டை சார்ந்த 8 & 9 உடனும் செயல்படும்.
- ரம்மி விளையாட்டில் ஜோக்கர்கள் மிகவும் முக்கியமானவை, மேலும் உங்களது விளையாட்டுகளில் ஜோக்கர்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவது குறித்து நீங்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். எப்போதும் ஒரு செட்டை நிறைவு செய்யவோ அல்லது அதிகபட்ச புள்ளி மதிப்புகளைக் கொண்ட செட்டுடனோ ஜோக்கரை பயன்படுத்துங்கள். மற்றொரு விஷயம், இயல்பான செட்டிற்கு முடிந்தவரை ஜோக்கரை பயன்படுத்தாமல் இருப்பது ஆகும்.
- ஒரு செட்டை நிறைவுசெய்ய ஒரு குறிப்பிட்ட கார்டுக்காக முடிவின்றி காத்திருப்பது புத்திசாலித்தனமான விஷயமாக இருக்காது. நீங்கள் உங்களது கார்டுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி மாற்றங்களை செயல்படுத்த அவற்றை மீண்டும் மறுமதிப்பீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
- நீங்கள் உங்களது கார்டுகளை அடுக்கும்போது, விளையாடுவதற்கு எளிதாக இருக்கும் வகையில் அதனை அடுக்கவும். இதனை செய்வதற்கான ஒரு வழி, வண்ணங்களை மாற்றுவதாகும். இந்த வழியில் நீங்கள் ஒரு கார்டை வைத்துக் கொள்ளும்போதோ அல்லது விடுவிக்கும் போதோ குழப்பங்கள் இல்லாமல் இருக்கமுடியும்.
- நீண்ட நேரத்திற்கு கார்டுகளை வைத்திருக்க வேண்டாம். சாமர்த்தியமான செயல் என்னவெனில், பயன்படுத்தாமல் இருக்கும் கார்டுகளை முடிந்தவரை சாத்தியமான வகையில் விரைவாக தொடர்ந்து விடுவித்துக் கொண்டே இருக்கவேண்டும், குறிப்பாக அவற்றின் புள்ளிகள் அதிகமாக இருக்கையில்.
ரம்மியில் வெற்றி கொள்வதற்கான தந்திரங்கள்
ரம்மி விளையாட்டில் வெற்றி கொள்வது என்பது விளையாட்டில் திறன்களை வளர்த்துக் கொள்வது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்திய ரம்மி ஆன்லைன் விளையாட்டை விளையாட உங்களுக்கு தேவைப்படும் திறன்களானவை, உங்களது கார்டுகளை மதிப்பீடு செய்யும் திறன் & சிறந்த அனுகூலத்திற்காக அவற்றை பயன்படுத்துவது மற்றும் உங்களது எதிராளிகள் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதை குறித்து விழிப்புடன் இருப்பது போன்றவற்றை உள்ளடக்குகிறது. ஒரு நல்ல எதிராளியும் அதே விஷயத்தை தான் செய்திடுவார் என்பதை நீங்கள் உறுதிசெய்து கொள்ளலாம். பின்வரும் சில தந்திரங்களைக் கொண்டு நீங்கள் அவர்/அவள்/அவர்களை தந்திரமாக வெற்றி கொள்ளலாம்:
- ஒரு தொடருக்காக திறந்தநிலை தொகுதியிலிருந்து கார்டுகளை எடுக்கும்போது, உங்களது எதிராளி/எதிரிகளுக்கு உங்களது விளையாட்டை குறித்த ஒரு குறிப்பை நீங்கள் கொடுக்கிறீர்கள் என்ற உண்மை குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு கார்டை (அது உங்களிடம் இரண்டு இருந்தால்) நீங்கள் போடுவதன் மூலம், அவர்களை நீங்கள் குழப்பலாம்.
- மேலும் உங்களுக்கு தேவைப்படும் கார்டுகளை உங்களுக்கு வழங்கிக் கொள்ளும் வகையிலும் நீங்கள் உங்களது எதிராளிக்கு தந்திரமான முறையில் குழப்பத்தை கொடுக்கலாம். இது ஒரு செட்டை அமைக்க ஒரு கார்டை நீங்கள் உண்மையாக எதிர்நோக்கும் நேரத்தில் வேலை செய்திடும். உதாரணமாக, நீங்கள் மூன்று ஜாக் கார்டுகளின் செட்டை உருவாக்குகிறீர்கள், உங்களிடம் ஹார்ட்டுகள் & கிளப்புகளின் ஜாக் உள்ளது, எனவே ஸ்பேடுகளின் ஒரு குயினைன் விடுவிப்பது உங்களது எதிராளிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும், அதனால் அவர் ஸ்பேடின் ஜாக் கார்டை விடுவிக்கக்கூடும், அதுதானே உங்களுக்கு தேவையானது! இவ்வாறு தவறாக வழிநடத்தி, உங்களுக்கு தேவையான கார்டை உங்களது எதிராளியையே வழங்கச் செய்வது என்பதுதான் தூண்டிலிடுதல் மற்றும் மீன்பிடித்தல் என்று அழைக்கப்படுகிறது.
*மேற்கூறிய கார்டு விளையாட்டு குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் அல்லது மூலோபாயம் ஆனது வழிகாட்டுதல்களாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் அவை நிச்சயமாக நீங்கள் விளையாட்டை வெல்வீர்கள் என்று உறுதி அளிக்கவில்லை. இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ஏற்படும் எந்தவிதமான மோசமான விளைவுகளுக்கும் கிளாசிக் ரம்மி பொறுப்பேற்காது.
பிற மொழிகளில் ரம்மி டிப்ஸ் மற்றும் தந்திரங்கள்: